Husband wife தாம்பத்யம் / nice one read fully

தாம்பத்யம்!

அந்த முதியவர் தடுத்தடுமாறியபடி தெருவில் நடந்து கொண்டிருந்தார். எனது டூ வீலரை நிறுத்தி, அருகில் சென்று பார்த்தேன். அவரது காலில் கட்டை விரல் நசுங்கி ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

"என்னங்க ஆச்சு"னு கேட்டேன்.
"வேகமாக வந்த ஆட்டோ சக்கரம் காலுல ஏறிடுச்சு தம்பி" என்றார்.

"வாங்க ... எனக்கு தெரிந்த டாக்டர் பக்கத்துல தான் இருக்கார், கட்டுப் போட்டு மொதல்ல ரத்தம் கசியறத நிறுத்தணும். கூடவே டி.டி இஞ்செக்‌ஷனும் போட்டுக்கலாம்!" என்றேன்.

வேண்டாம் என்று மறுத்தவரை விடாப்பிடியாக அழைத்து சென்றேன்.

எல்லாம் முடியவும்.... "மணி என்ன தம்பி.... நேரமாயிடுச்சே.. நேரமாயிடுச்சே...!" என்று பறந்தார் பெரியவர்.

"அப்படி என்னங்க அவசரம்..?! "என்றேன் நான்.

"என் பெண்டாட்டி பசியோட வீட்டில இருக்கா. அவளுக்கு இட்லி வாங்கிட்டு போகணும்..!" என்றார்.

"என்ன பெரியவரே... உங்க காலுல அடிப்பட்டிருக்கு... இப்ப இட்லியா முக்யம்...?! லேட்டா போனாத்தான் என்ன, திட்டுவாங்களா...?!" என்று சீண்டினேன்.

அதற்கு அவர் "அவ அஞ்சு வருஷமா மனநிலை பாதிச்சு நினைவில்லாம இருக்கா தம்பி. எல்லா ஞாபகமும் போயிடுச்சி! நான் யார்னுகூட அவளுக்குத் தெரியாது...!" எனவும்,

நான் "அப்படிப்பட்டவங்க உங்களை லேட்டுன்னு எப்படி கேப்பாங்க...? அவங்களுக்குத் தான் உங்களை யாரென்றே தெரியாதே! கவலை படாதீங்க" என்றேன்.

அதற்கு அந்த முதியவர் புன்னகைத்தபடியே என்னை பார்த்து

 "ஆனா அவ யாருன்னு எனக்குத் தெரியுமே தம்பி..!"

இது தான் தாம்பத்யம்!

Tamil whats app sma

ஆறுதலே கூற முடியாத
சில கஷ்டங்களுக்கு
நிச்சயமாக அழுகை
ஒரு மருந்தாக இருக்கும்....

நாளை என்பதே நமக்கு
உறுதியில்லை...
நாளும் அது புரிவதில்லை

பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட
பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.

இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்...
ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...

நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ....

நம்மில் பெரும்பாலானோர்,
சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட ...,
இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....


வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,
மனஅமைதியையும் தேடுங்கள் ...
மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,
ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை

இனி எதற்கும் "ஏன்" என கேள்வி கேக்காதே என்று சொன்னால் ....
அதற்கும் ...
"ஏன்" என்று தான் கேட்பாள் இந்த பெண் .

அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ...
இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?

சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ...
15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.

கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!

வேலை இல்லாதவனின் பகலும்,
நோயாளியின் இரவும் மிக நீளமானவை.

வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...

மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால்
...
அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் ...

எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....

இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,
வாழ் நாட்கள் போதாது ....
ஏனெனில் ...
இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் ...


பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.


தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்
குற்றங்களுக்கு காரணம்!


# சிரித்துக்_கொண்டே
# உன்னோடிருந்து
# உனை_சீரழிக்கும்
# துரோகியை_விட ...
# முறைத்துக்_கொண்டே -
# உன்
# முன்னிருக்கும்
# எதிரி_மேலானவன் !.....

அவ்வளவு
எளிதாக யாரிடமும் இருந்து
பிரிந்து விட
இயலவில்லை....
பிரிவு என்ற பெயரில்
கொஞ்சம்
ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது

உனக்காக... தன் மீதான
நியாயமான வாதத்தைக்
கூட நிறுத்திக் கொள்ளும்
பெண் கிடைத்தால்
ஒருபோதும் இழந்து விடாதே..

அலைகளில் கால்களை
நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல்
நடுவில்
பயணப்படும்போது
கிடைப்பதில்லை...
பேரின்பம் வேண்டாம்...
சிறுசிறு சந்தோஷங்கள்
போதும் வாழ்வை அனுபவிக்க.........


நூறு பேரின் வாயை
மூட முயற்சிப்பதை
விட நம் காதுகளை
மூடிக்கொள்வது
சிறந்தது......

வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..# புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!
# மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!
# எல்லா "பிரச்சினைகளுக்
கும் இந்த வாய் காரணம்..!!!

அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி உள்ள மனிதனையும்,,அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க
முடியாது.....

வாழ்வோடு போராடிச்
சாவதிலும்
சாவோடு போராடி
வாழ்வதிலுமே...
வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!!

இனிய வணக்கங்கள்.

Illara dharmam

*இல்லற தர்மம்*

கட்டிய மனைவியை
கடைசி வரை
கண் கலங்காமல்
காப்பவன்
தவம் செய்ய தேவை இல்லை

இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது

அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை கர்மா வே வழி நடத்தும்

96 தத்துவங்கள்
முடிவு பெறுவது
இருபத்தி ஒரு வயதிலே

அதன் பிறகே
அவனது
சொந்த
ஆன்ம கர்மா
செயலில் இறங்கும்.

சிவமாக இருந்தால் மட்டும்
சிரசு ஏற முடியாது
சக்தியோடு
துணை சேர வேண்டும்.
சிரசு ஏற பல வழி

தியானம் மூலம்
பக்தி மூலம்
ஞான மூலம்
யோக மூலம்
தீட்சை மூலம்
சிவசக்தி மூலம்
இன்னும்
எத்தனையோ மூலம்
வழி உள்ளது
சிரசு ஏற.

ஆனால்
சிறந்த மூலம்
இல்லற தர்மம்.

சிவம் பிறக்கையிலே
அவனுக்கு முன்பே
சக்தி பிறந்து விடுகிறது

சக்தி மாறி
சிவம் சேர்ந்தாலே
பிறவியே சிக்கலே

மனம் பொறுத்தம்
பூமியிலே ஜெயிப்பது இல்லை

ஆன்ம பொறுத்தமே
பிறவியை ஜெயிக்கும்.

அந்த சக்தி யோடு
சிவம் சேரும் போதே
சர்வமும் சாந்தி ஆகும்

சிவ சக்தி இடையே
ஊடலும் கூடலூம்
உற்சாகம் தானே......!!!

ஆனால்
சக்தியின் கண்ணீருக்கு
சிவம் காரணமானால்
அதை விட
கொடிய கர்மா
உலகில் இல்லை

ஒருவன்
வாழ்வை ஜெயிக்க
ஆயிரம் வழி
தர்மத்தில் உள்ளது உண்மையே

ஆனால்
உறவுகளை கொண்டே
உலகை வெல்வதும்
பிறவி பிணி அறுக்க வும்
ஒரு வழி உள்ளது
உலகம் அறியாதது.

சொந்தம் என்பது
பழைய பாக்கி என
அறிந்தவணுக்கு
சொந்தம் சுமை இல்லை.

நட்பு என்பது
பழைய பகை என்பதை
பண்போடு அறிந்தவணுக்கு
பதற்றம் இல்லை

எதிரி என்பவன்
தனது கர்மாவின்
தார்மீக கணக்கே என
தன்மை யோடு உணர்ந்தவனுக்கு
எதிரி
எதிரி இல்லையே

உனது எதிரியும் நீயே

உனது செயலே
கர்மா ஆகி
அந்த கர்மாவே
நீ எதிரி என நினைக்கும்
ஒரு உயிருள்ள சடலத்தை
உனக்கு எதிராக
பயன்படுத்துகிறது என நீ
உணரும் போது

உன் எதிரி முகத்தில
உனது கர்மா
உனது கண்களுக்கு தெரிய வந்தால்

எதிரி
உனக்கு எதிரே இருந்தாலும்
கலக்கம் தேவை படுவதில்லை.

உன்னை
உடனிருந்தே கொல்லும்
உறவும்
உன்னோடு பிறக்கும்
உனது
பழைய கணக்காலே

பழைய கணக்கு புரிந்தால்
பந்த பாசம்
சகோதரத்துவம் மீது
பற்று அற்ற பற்று வைத்து
பிறவி கடமை வெல்லலாம்

கர்மாவின் கணக்கு புரிந்தால்
உனது பக்கத்தில்
சரி பாதி அமரும்
மனைவி
யார் என்றும் புரியும்

தாய் தந்தையை
அன்போடு
பூஜிப்பவன்
தந்தை வழி
தாய் வழி
ஏழு ஜென்ம கர்மாவில்
இருந்து தப்பிக்கலாம்

உறவுகளுக்கு
அவர்கள் தரும் இன்னல்கள்
பொறுத்து
உபகாரமாக உதவி வந்தால்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
உனது
ஏழு ஜென்ம
சமூதாய கர்மாவில்
இருந்து தப்பிக்கலாம்.

கோயில் போனாலோ
மகா குலத்தில்
குளித்தாலோ
ஒன்னும் மாறாது

சிறு இன்பம் மட்டும்
சிறிது காலம் கிடைக்கும்
அவ்வளவே

ஆனால்
ஒரே ஒரு உறவை
நீ பூஜித்தால்
பிறவி பிணி
மொத்தமாக தீரும்
அது
மனைவியே.

மனைவியை
மகிழ்ச்சியாக வைப்பது
உலகிலேயே
சிரமம் மட்டும் அல்ல
அது தான்
உலகிலேயே
சிறந்த
தவம்

தவம் என்பது
சாமாண்யன்களுக்கு சிரமமே

கட்டிய மனைவியை யும்
உன் மூலம்
அவள் பெற்ற பிள்ளைகளையும்
உளமாற நேசித்து
உன்னதமாக
உனது வாழ்வை
ஆனந்தமாக நீ
அர்ப்பணித்தால்
அதுவே
உலகின் சிறந்த தர்மம்
சிறந்த தவம்

தாய் தந்தை யை
வணங்கினால்
ராமேஸ்வரம் போக தேவை இல்லை
பித்ரு தோஷம் நீங்க.

உறவுகளை மதித்தால்
கிரக தோஷம் நீங்க
திருவண்ணாமலை
இடைக்காடரை
தேட தேவை இல்லை
நவ கிரகமும்
சுற்ற தேவை இல்லை

மனைவியை
பெற்ற பிள்ளையை நேசித்தால்
அவர்களை
ஆனந்தமாக வைத்தால்
கர்ம விமோஜனம் தேட
அகத்தீசனை தேடி
பாபநாசம்
போக தேவை இல்லை

இதற்கு தான்
இல்லற வாழ்க்கை அமைத்தான்
நமது
முப்பாட்டன்
ஆதி யோக வம்சம்.

மனைவி அழும் வீடே
நரகம்.

மனைவி சிரிக்கும் வீடே
பிரபஞ்ச சொர்க்கம்.

சக்தி உணர்ந்தாலே மட்டுமே
சிவம் ஜோதி ஆக ஜொலிக்கும்......!!!

What's app Funny Tamil sms

ஒரு மாணவன் ஆங்கில வாத்தியாரிடம் ஒரு சந்தேகம் கேட்டானாம்,,,

சார் "  "நடுரே,," னா
என்னது?  😶

சார் அப்றம் சொல்றேன்னு சமாளித்து,, டிக்சனரியில்📓📖.... தேடி தேடி,-. ஓய்ந்து போனார் , 🏃

அவனைக் கண்டால்  காணாதது போல இருந்தார்.... 🏃

இருந்தாலும் அந்த மாணவன் அவரை விடாமல் தொலைத்து எடுத்தான்,,,

சொல்லுங்க சார்??? ...   

வாத்தியார்  அவனிடம் சரி ஸ்பெல்லிங் சொல்லு என்றார் 😐

அவன்  N AT U R E .... சொல்ல
கடுப்பாகி 😑போன சார் ஏன்டா நேச்சர் னு சொல்லாமல் என்ன சாவடிச்சியா நீ.... உன்ன ஸ்கூல் விட்டே அனுப்புறேன் இருனு கத்தினார்,,,

உடனே சார் காலில் விழூந்து
அழுதான்....

சார்,,... அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க,...
என் புடுரே ( future ) வீணாயிடும்

 

Kadi SmS | Copyright © 2011 | Powered by Blogger | Blog Designed By Yogen Basnet